திருக்குறள்

அதிகாரம் / Chapter / Adhigaram : (1) கடவுள் வாழ்த்து / The Praise of God / Katavul Vaazhththu 1
இயல் / Chapter Group / Iyal : பாயிரவியல் / Prologue / Paayiraviyal 1
பால் / Section / Paal : அறத்துப்பால் / Virtue / Araththuppaal 1

குறள் (2) Couplet (2) Transliteration (2)
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
No fruit have men of all their studied lore,
Save they the 'Purely Wise One's' feet adore
Katradhanaal Aaya Payanenkol Vaalarivan
Natraal Thozhaaar Enin
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?